Tuesday, October 28, 2008

வாழ்த்து மடல்

செய்தி ஒன்றுமில்லை, இணயத்திலும் காணவில்லை,
ஆனால் காலம் அருகில் என்றறிவேன்.
என் மனத்திரையில் ஏனோ ஒரு பதட்டம்,
உன் கணவன் கைப்பிசைகிறான்,
உள்ளிருந்து உன் அலறல் கேட்கிறது.
கொல்லத்துடிக்கிறாய் நீ, நானும் தான் அவனை.
ஆனால் நாளை எங்கள் சந்தோஷத்தருணங்களின் பரிசென்பாய்.
நடக்கட்டும், இதோ! உன் உயிர் ஊற்றி இன்னொரு வரம் பூமிக்கு
உன் மருப்பிறப்பு!
மனமுவந்து வாழ்த்துகிறேன்.
என்னிடம் உன் குழந்தைக்கு தர ஒன்றுமில்லை
சுதந்திர சிந்தனையைத் தவிர!

Tuesday, January 8, 2008

புத்தாண்டு தாண்டவம்

எழுவது ஜோடி கைகள் தீண்டவில்லை,
கோடானுகோடி கண்கள் தீண்டின.
அவள் இடையைத் தணிக்கைச் செய்து
மானம் காத்தீரோ?
காமுகக்கழுகுகள் மேனி சூழ்ந்தும்,
சேதமற்று மீண்டுவந்தாள்.
"பளிச் செய்தி" போட்டு போட்டு,
தொடுதலற்று யோனி கிழித்தீர்.
அவள் இரும்புக்கை அரண் தாண்டி
ஒரு விரலும் பாயவில்லை,
நாள்முழுக்க சுவைப்பார்த்தும்
உங்கள் நாவோ ஓயவில்லை.
ஒளிக்கீற்றில் பதிந்ததோ பதினான்கு,
பதியாத ஆயிரங்கள் எங்கே?
வீரியமற்ற பேனா தூக்கியெரி.
விந்துள்ளவனென்றால் வாள் எடு.
காவலும், நீதியும் கழுத்திற்கு தூக்கிடட்டும்.
நீ கண்களையும் கைகளையும் பறித்து வா,
அருங்காட்சியகத்தில் வைப்போம்.
மறைந்த உயிரிரனங்கள் பட்டியலில்.